தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அவர் ஒரு ஆபாச நடிகை! தன்னை விமர்சித்த கமல் பட நடிகைக்கு கடும் பதிலடி கொடுத்த கங்கனா!

Kangana answered to urmila

Kangana answered to urmila  Advertisement

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில்  சுஷாந்த்  தற்கொலைக்கு பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர்களின்  ஆதிக்கம் மற்றும் போதை பொருள் புழக்கம் போன்றவைதான் காரணம் என நடிகை கங்கனா குற்றம்சாட்டினார்.

மேலும் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், தாலிபான் தீவிரவாதிகளை போல ஆட்சியாளர்கள் உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 
கங்கனா ரணாவத்தை கண்டித்து பலரும் பேசி வருகின்றனர். மேலும் சிலர் தைரியமாக வெளிப்படையாக பேசி வரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தும்  வருகின்றனர்.

Urmila

 

இந்நிலையில் இந்தியன் படத்தில் நடிகர் கமலுடன் நடித்த நடிகை ஊர்மிளா, கங்கனா ரனாவத் பாலிவுட் சினிமா குறித்தும், மும்பையை குறித்தும் மிகவும் அவதூறாக பேசி வருகிறார். என்னால் அதனை பொறுத்துக்கொள்ள முடியாது. போதைப் பொருள்களின் பிறப்பிடமே கங்கனாவின் சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசம்தான். அங்கிருந்துதான் அவர் போதை மருந்துக்கு எதிரான போராட்டத்தை தொடங்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகை கங்கனா, ஊர்மிளா ஒரு ஆபாச நடிகை. அவரை நடிப்பால் யாருக்கும் தெரியாது. ஆபாசங்களுக்கு பெயர் போனவர். அவர் நான் தேர்தலில் பாஜக கட்சியில் சீட் வாங்குவதற்காக முயற்சி செய்கிறேன் என கூறியுள்ளார். தேர்தலில் சீட்டு வாங்குவது மிகவும் சுலபம். அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும்போது எனக்கு கிடைக்காதா?  என கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Urmila #kangana
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story