"காஞ்சனா படத்தில் நடித்தது தான் என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு" திருநங்கையின் கண்ணீர் பேட்டி..
காஞ்சனா படத்தில் நடித்தது தான் என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு திருநங்கையின் கண்ணீர் பேட்டி..
தமிழ் சினிமாவில் 2011 ஆம் வருடம் வெளியான வெற்றி திரைப்படம் 'காஞ்சனா' இப்படத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர்.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான இப்படம் பேயை மையப்படுத்திய கதைக்களத்தை கொண்ட திரைப்படம் ஆகும். 'காஞ்சனா' திரைப்படத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் வரை திரையரங்கில் வெளிவந்து வெற்றி நடை போட்டு இருக்கிறது.
பேய் படம் என்றாலே பயப்படும் குழந்தைகளுக்கு மத்தியில் பேய் படத்திலேயே நகைச்சுவையை கலந்து குழந்தைகள் ரசிக்கும் விதமாக இப்படம் அமைந்ததால் மிகப் பெரும் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் சரத்குமார் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவருக்கு மகள் கதாபாத்திரத்தில் ஒரு திருநங்கை நடித்து இருப்பார்.
அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் 'காஞ்சனா' படத்தில் நடித்ததை குறித்து பேசினார். அவர் கூறியதாவது, "காஞ்சனா படத்தில் நடித்தது தான் என் வாழ்வில் நான் செய்த மிகப்பெரும் தவறு. இப்படத்திற்கு பின்பு எனக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. வேறு வேலை எதுவும் பார்க்கவும் முடியவில்லை. இதனால் நான் மிகவும் கஷ்டத்திற்கு உள்ளானேன் என்று கூறியிருக்கிறார்.