கர்நாடகாவில் புஷ்பா படம் புறக்கணிப்பு?.. தெலுங்கு படங்களின் குப்பை மேடா இது? கன்னடர்கள் ஆதங்கம்..!
கர்நாடகாவில் புஷ்பா படம் புறக்கணிப்பு?.. தெலுங்கு படங்களின் குப்பை மேடா இது? கன்னடர்கள் ஆதங்கம்..!
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், செம்மர கடத்தலால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான கதையம்சத்தில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இந்த படம் 2 பாகமாக வெளியிடப்படவுள்ளது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையைத்து இருக்கிறார்.
புஷ்பா படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. இப்படம் நாளை (டிச. 17,2021) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் படம் வெளியாகிறது.
அல்லு அர்ஜுன், பாசில், ரஷ்மிக்கா மாடானா ஆகியோர் நடிப்பில் படம் உருவாகியுள்ளது. ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள புஷ்பா, ரூ.250 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஆண்ட்ரியா பாடிய டப்பிங் பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும், எதிர்ப்பையும் பெற்றன.
ஆந்திராவில் எடுக்கப்பட்டுள்ள புஷ்பா படம் தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படவுள்ள நிலையில், கன்னட மொழியில் டப்பிங் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கன்னட மொழி பேசும் மக்கள், படத்தை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
மேலும், தெலுங்கு மொழிகளில் எடுக்கப்படும் படங்களில் குப்பை கொட்டும் தளமா கர்நாடகா?. நீங்கள் எந்த மொழியிலும் படம் எடுங்கள், அவை கர்நாடகாவில் ரிலீஸ் செய்யப்பட்டால் கன்னடத்தில் டப்பிங் செய்த படமாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
டப்பிங் செய்து கன்னட மொழியில் படத்தை படக்குழு வெளியிடவில்லை. மாற்றாக தெலுங்கு மொழிகளில் அதிக திரையரங்கில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது எனவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
கர்நாடகாவில் புஷ்பா படத்தை சுவாகத் என்டர்ப்ரைசஸ் நிறுவனம் வெளியிடும் நிலையில், அந்த நிறுவனத்திடமும் சரமாரி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பல்வேறு திரையரங்கில் டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரியவருகிறது.