திடீரென ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய பிரபல நடிகர்! ஏன், என்னாச்சு? காரணத்தை கேட்டா செம ஷாக்காகிடுவீங்க!!
கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்பட
கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்தியாவிலும் பரவி கோர தாண்டவமாடியது. இந்த நிலையில் சில மாதங்கள் கொரோனா பரவல் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில் யுவரத்னா, ருஸ்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல கன்னட நடிகரான அர்ஜுன் கவுடா, கொரோனா பரவலால் மக்கள் பெருமளவில் திணறிவரும் இந்த இக்கட்டான தருணத்தில் தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என எண்ணி, "புரொஜக்ட் ஸ்மைல் டிரஸ்ட்" என்ற அமைப்பை தொடங்கி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஆம்புலன்ஸ் டிரைவராக மாறியுள்ளார்.