ஆசீர்வாதம் பண்ணும்போது கூட... இளையராஜாவை விமர்சித்த நெட்டிசன்! கூலாக விளக்கமளித்த சினேகனின் மனைவி!!
ஆசீர்வாதம் பண்ணும்போது கூட... இளையராஜாவை விமர்சித்த நெட்டிசன்! கூலாக விளக்கமளித்த சினேகனின் மனைவி!!
தமிழ் சினிமாவில் அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து தனது ஈடில்லா இசையால் முன்னணி டாப் இசையமைப்பாளராக கொடிகட்டி பறப்பவர் இளையராஜா. அவர் தனது இசையால் உலகளவில் லட்சக்கணக்கான ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார்.
இன்றளவும் அவரது பாடல்களை மெய்மறந்து ரசிப்பவர்கள் எக்கசக்கம். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா அண்மையில் தனது 80வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்தநாள் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் பாடலாசிரியர் சினேகன் அவரது மனைவி கன்னிகாவுடன் நேரில் சென்று இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் அவரிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளனர். அந்த புகைப்படங்கள், வீடியோ வைரலான நிலையில், ஆசீர்வாதம் பண்றபோ செருப்ப கழட்டனும்னு கூட அவருக்கு தோணவில்லை. ஆசீர்வாதம் பண்ணும்போது காலை தொட்டுதான் வாங்குவாங்க. செருப்ப கழட்டி இருக்கலாம் என ரசிகர் ஒருவர் கமண்ட் செய்துள்ளார்.
அதற்கு கன்னிகா,‘அவரை தப்பா நினைக்காதீங்க. அவர் எப்போதும் வீட்ல கூட சாக்ஸ் அல்லது செருப்பு போட்டுதான் இருப்பாங்க சில மெடிக்கல் பிரச்சினையால் என்று பதில் கூறியுள்ளார்.