கெத்து காட்டுறார்.. அவர்தான் என்னோட கட்டப்பா! நடிகர் கார்த்தி யாரை கூறியுள்ளார் பார்த்தீர்களா!!
ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்
ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் சுல்தான் படம் ஏப்ரல் 2 ம் தேதி ரிலீசாக உள்ளது.
ஆக்ஷன் கலந்த குடும்ப படமான இதில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் அவர்களுடன் நெப்போலியன், லால் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்துள்ளனர்.
மேலும் ஏராளமான படங்களில் கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டிய நடிகர் லால் சுல்தான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து நடிகர் கார்த்தி கூறுகையில், சுல்தான் படத்தில் லால் அவர்களுக்கு படம் முழுவதும் என்னுடன் பயணிப்பது போன்ற, எனது ஒவ்வொரு உணர்விலும் கூடவே இருப்பது போன்ற கதாபாத்திரம். சண்டை, நடனம், உணர்வுப்பூர்வமான நடிப்பு என எல்லாவற்றிலும் அவர் சிக்ஸர் அடித்துள்ளார். அவரை நான் எப்பொழுதும் கட்டப்பா என்றுதான் அழைப்பேன் என்று கூறியுள்ளார்.