ப்பா.. ஜாக்கி ஜானுடன் இருக்கும் இந்த சீரியல் பிரபலம் யார்னு பார்த்தீர்களா! ஆள் அடையாளமே தெரியலையே!!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் செ
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் செம்பருத்தி. இந்த தொடர் டிஆர்பியிலும் முன்னணி வந்து பெருமையை தேடித் தந்தது. இந்த தொடரில் ஹீரோவாக ஆதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கார்த்திக் ராஜ்.
பின்னர் சில காரணங்களால் அவர் செம்பருத்தி தொடரிலிருந்து விலகிய நிலையில், தற்போது விஜே அக்னி ஹீரோவாக நடித்து வருகிறார். கார்த்திக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் ஆபிஸ் என்ற தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
மேலும் நடிகர் கார்த்திக் ராஜ் 465 மற்றும் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல என இரு படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் ஜாக்கிசானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் முடி எல்லாம் கட் செய்து மிகவும் வித்தியாசமான லுக்கில் கார்த்திக் உள்ளார்.