தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னது! செம்பருத்தி சீரியலில் இருந்து விலகுகிறாரா நம்ம ஆதி! ஏன் என்னாச்சு? வெளியான தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!

நடிகர் கார்த்திக் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் பரவி வருகிறது.

Karthik may be releave from semparuthi serial Advertisement

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று டிஆர்பியில் முதல் இடத்தில் வந்து தொலைக்காட்சிக்கே பெருமை சேர்த்து சாதனை படைத்த சீரியல் செம்பருத்தி. இந்த தொடரில் ஹீரோவாக ஆதி என்ற கதாபாத்திரத்தில் ஆபீஸ் சீரியலின் மூலம் பிரபலமான கார்த்திக்கும், ஹீரோயின் ஆன பார்வதி கதாபாத்திரத்தில் சபானாவும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது 800 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இருந்து நடிகர் கார்த்திக்  தானே  வெளியேறுவதாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க புதிய ஹீரோ ஒப்பந்தம் செய்தபிறகு, இதுகுறித்து அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

semparuthi

இதற்கிடையில் சமீபத்தில் இந்த தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஜனனி நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், கார்த்திக்கு சீரியலில் நடிக்க ஆசையில்லை, படங்களில் நடிக்கத்தான் ரொம்ப ஆசை அதனால் அவர் விலகலாம் என எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#semparuthi #karthik #Releave
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story