தனுஷ்க்கு மகனான பிரபல நடிகரின் மகன்.! உற்சாகத்தோடு என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!
karunas son act with dhanush
தமிழ்சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார்.
இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்துள்ளார். மேலும் பூமணியின் வெக்கை என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.மேலும் திரைப்படத்தில் பசுபதி, பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்மேலும் அவர்களுடன் கருணாஸின் மகன் கென் நடித்துள்ளார்.அதில் அவர் தனுஷுக்கு மகனாக உள்ளார்.
கென் ரெட்டை சுழி, நெடுஞ்சாலை, ரகளை புரம், அழகு குட்டி செல்லம் போன்ற படங்களில் சிறுபையனாக நடித்துள்ளார். மேலும் பாடலும் பாடி வருகிறார். இந்நிலையில் கென் நன்கு வளர்ந்து இளவயது வாலிபனாக உள்ளார்.
இதுகுறித்து கென் கூறுகையில், வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் பணியாற்றியது மிகவும் மறக்க முடியாத அனுபவம். அவர்கள் இருவரிடமிருந்தும் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். தனுஷ் என்னிடம் மிகவும் இனிமையாக பழகினார் அவரது வீட்டு பையன் போலவே என்னை பார்த்துக் கொண்டார் என கூறியுள்ளார்.