என்ன அழகு... நித்யானந்தாவிற்கு நோபல் பரிசு கொடுத்தே ஆகவேண்டும், அதிரடியாக கூறிய பிரபல நடிகை.!
kasthuri recommend nobel prize for nithyananda
சாமியார் நித்யானந்தாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக விமர்சனம் செய்துள்ளார்.
சர்ச்சை சாமியார் நித்யானந்தாவை கடவுளாக சித்தரித்து பரமசிவோகம் ஒன்னெஸ் கேப்சூல் 50 என்ற ஆல்பம் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவரது சிஷ்யர்கள் வெளியிட்டுள்ள அந்த ஆல்பத்தில் நித்யானந்தா கடவுளாக நடித்துள்ளார்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அந்த பாடலில் நித்யானந்தாவின் ஜடாமுடி, மீசை பற்றியெல்லாம் வர்ணிப்பது போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.
சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த நடிகை கஸ்தூரி,
என்ன உன் அழகு ஜடாமுடி மீசை, இலக்கியத்திற்கான நோபல் பரிசை உடனடியாக நித்யானந்தாவிற்கு வழங்க வேண்டும் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.