கத்ரீனா கைப் தங்கியிருக்கும் வீட்டின் ஒருமாத வாடகைமட்டும் எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா தல சுத்தும்!
Katrina kaif paying 1.5 lakhs for house rent per month
பாலிவுட்டில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் பிரபல நடிகை கேத்ரீனா கைப். இவர் தங்கி இருக்கும் வீட்டின் ஒருமாத வாடகை மட்டும் எவ்வளவு சென்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
அதன்படி இவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு வாடகை மட்டும் மாதம் ஒன்றுக்கு ரூ.1.5 லட்சம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் என பாலிவுட்டின் அணைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கத்ரினா கைப் ஒரு படத்திற்கு ரூ.6 கோடி முதல் ரூ.8 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.
இதுவரை சொந்த வீடு வாங்காத அவர் இன்னும் வாடகை வீட்டில்தான் இருக்கின்றார். மும்பையில் அவர் தங்கியிருக்கும் பிரமாண்டமான வீட்டிற்கு அவர் மாதம் ஒன்றுக்கு ரூ.1.5 லட்சம் வாடகை கொடுத்துக்கொண்டு இருப்பதாக மும்பை பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மும்பை கடற்கரையோரம் இந்த அழகிய வீடு அமைந்து உள்ளது. வீட்டின் ஜன்னலை திறந்துவிட்டால் அங்கிருந்தபடியே கடற்கரையோர அழகுகளை கண்டு ரசிக்கலாமாம்.