நடிகர் கவினுக்கு அடித்த ஜாக்பாட்.. வெளியான அசத்தல் தகவல்.!
நடிகர் கவினுக்கு அடித்த ஜாக்பாட்.. வெளியான அசத்தல் தகவல்.!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் கவின். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்த மூலம் பிரபலமாகி, தற்போது தமிழ் சினிமாவிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார்.
சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனிடையே தனது நீண்டகால தோழியான மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நடிகர் கவின் தற்போது நளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அதிதி பொஹங்கர் மற்றும் பிரீத்தி முகுந்தன் ஆகிய இருவரும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது