கீர்த்தி சுரேஷ்சா இது! டிக் டாக்கில் பிரபலமாகும் அந்த புதுமுகம் யார் தெரியுமா?
keerthisuresh debut face
மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மாறியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படம் படுதோல்வி அடைந்தது.
பின் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த 'ரஜினி முருகன்' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, ரெமோ, தொடரி, பைரவா, என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்றுவிட்டார். இவர் நடிப்பில் நடிகையர் திலகம் படம் இவருக்கு பெரும் பெயரை வாங்கித்தந்தது.
இப்படத்திற்காக கீர்த்திக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இந்நிலையில் கீர்த்தியின் வசனத்தை பலரும் டிக்டாக்-ல் வீடியோவாக செய்து வருகின்றனர்.
அதைப்போலவே இங்கு ஒரு பெண் அச்சு அசல் அப்படியே கீர்த்தி சுரேஷ் போலவே உள்ளார், அவர் கீர்த்தியின் வசனத்தை டிக்டாக் செய்துள்ளார்.
இதை கண்ட பலரும் ஏழைகளின் கீர்த்தி சுரேஷ், லோ பட்ஜெட் கீர்த்தி சுரேஷ் என வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.