இசைஞானிக்கு கிடைத்த மாபெரும் பெருமை! அதுவும் எங்கு தெரியுமா? உற்சாகத்தில் கோடானகோடி ரசிகர்கள்!
kerala government announce award to ilaiyaraja
தமிழ் சினிமாவின் இசைபகுதியை கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக தனது அற்புதமான இசையால் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவருக்கு உலகின் பலப்பகுதிகளும் கோடான கோடி இசை ரசிகர்கள் மட்டுமல்லாது, தனது அற்புதமான இசை ஆற்றலால் இசைக் கலைஞர்களையும் வியக்க வைக்கும் ஆற்றல் கொண்டவர்.
சோகத்தில் இருக்கும் பொழுது, பயணம் மேற்கொள்ளும்போது, உற்சாகமாக இருக்கும்போது என பல தருணங்களிலும் இவரது பாடல்கள் ரசிகர்களால் விரும்பி கேட்கப்படுகிறது. இவ்வாறு ஏராளமான ரசிகர் பட்டாளங்களை கொண்டு விளங்கும் இளையராஜா தற்போது துப்பறிவாளன் 2 ,சைக்கோ, மாமனிதன், தமிழரசன்,கிளாப் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைக்கவுள்ளார். இசைஞானி இளையராஜா தனது பாடலுக்காக ஏராளமான பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், தற்போது கேரள அரசு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்குவதாகக் அறிவித்துள்ளது.மேலும் இந்த விருதை அடுத்த மாதம் 15ஆம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் வழங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் விருதுடன் அவருக்கு 1 லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் 'Worshipful Music Genius' என்ற பட்டமும் வழங்கப்படவுள்ளதாக கேரள அரசு கூறியுள்ளது.