பீஸ்ட் படத்துடன் கேஜிஎஃப்-2 மோதலா? அசத்தலான பதிலால் தளபதி ரசிகர்களை கவர்ந்த பிரபல நடிகர்! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
பீஸ்ட் படத்துடன் கேஜிஎஃப்-2 மோதலா? அசத்தலான பதிலால் தளபதி ரசிகர்களை கவர்ந்த பிரபல நடிகர்! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
கடந்த 2018 ஆம் வருடம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற திரைப்படம் கேஜிஎப். அதனைத் தொடர்ந்து தற்போது கேஜிஎப்2 திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தையும் பிரசாந்த் நில் இயக்கியுள்ளார். மேலும் இதில் நடிகர் யாஷ், ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய்தத், பிரகாஷ்ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் கடந்த ஆண்டே வெளியாகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளி போனது. இந்நிலையில் கேஜிஎப் 2 திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் கேஜிஎப் 2 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் போது இரு படங்களும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாவது குறித்து கேட்கப்படட்டுள்ளது.
அதற்கு நடிகர் யாஷ், இது தேர்தல் அல்ல. தேர்தலில்தான் ஒருவர் வெற்றியடைந்தார் மற்றவர்கள் தோல்வி அடைவார்கள். இது சினிமா. இதில் இரு படங்கள் ஒரே நேரத்தில் வெளியானாலும் இரண்டு படங்களும் வெற்றியடையும். விஜய் சார் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது. பீஸ்ட் படம் வெளியாவது அவரது ரசிகர்களுக்கு பண்டிகைதான். கண்டிப்பாக நான் பீஸ்ட் படத்தை பார்ப்பேன். அதேபோல விஜய் ரசிகர்களும் என்னுடைய கேஜிஎஃப் 2 படத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனக் கூறியுள்ளார். இந்த பேச்சு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.