ஜப்பானில் ரிலீஸ் செய்யப்படுகிறது கே.ஜி.எப் படத்தின் 1 & 2 பாகங்கள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
ஜப்பானில் ரிலீஸ் செய்யப்படுகிறது கே.ஜி.எப் படத்தின் 1 & 2 பாகங்கள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
நடிகர் யாஷ், ஸ்ரீநிதி, ராமச்சந்திர ராஜு, தமன்னா, ஆனந்த், அர்ச்சனா ஜோஸ், மாளவிகா அவினாஷ், ஜான் கொக்கைன் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் கே.ஜி.எப் சாப்டர் 1.
இப்படம் முதலில் கன்னட மொழியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று, பின் பல மொழிகளில் அடுத்தடுத்து ரிலீஸ் செய்யப்பட்டது. கே.ஜி.எப் படத்தின் தாக்கம் கன்னட சினிமாவை மெருகூட்டி காண்பித்து இருந்தது.
இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகம் பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வெளியானது. படத்தின் 2ம் பாகம் வசூலில் சாதனை செய்தது. படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார், ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியது.
இந்த நிலையில், கே.ஜி.எப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் ஜப்பானில் ஜூலை 14ம் தேதி வெளியாகிறது. இந்த அறிவிப்பை நடிகர் யஷ் உறுதி செய்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
விரைவில் கே.ஜி.எப் படத்தின் 3ம் பாகமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.