திடீரென்று தள்ளிப்போகும் பிரபல தமிழ் நடிகையின் திரைப்படம்! என்ன காரணம் தெரியுமா?
kolamaavukokila movie release date change
தமிழில் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி இன்று லேடி சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.
சர்ச்சைகளுக்கு பெயர்போன இவர் அதில் இருந்து மீண்டு வந்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கோலமாவு கோகிலா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு ஏற்கவே அறிவித்துருந்தநிலையில் எதிர்பாராத விதமாக இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது
நெல்சன் திலீப்குமாா் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளாா். இந்த படத்தில் நகைச்சுவை நடிகா் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, பிரபல தொகுப்பாளினி ஜேக்லின், நவீன் குமாா் உள்ளிட்ட பலா் நடித்து உள்ளனர்.
#KolamaavuKokila Releases #August17th 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 #Nayanthara @anirudhofficial @Nelson_director pic.twitter.com/gLBmG2nUAC
— Lyca Productions (@LycaProductions) July 24, 2018
அண்மையில் வெளியான இப்படத்தின் பாடல் ஒன்று 37 லட்சம் பாா்வையாளா்களையும் கடந்து யூடியூப்பில் சாதனை படைத்து உள்ளது. படத்தின் டிரைலருக்கும் ரசிகா்கள் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் இப்படம் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 வெளியாகும் ஆகஸ்ட் 10 தேதி வெளியாகும் என்று அறிவித்தனர்.
கோலமாவு கோகிலா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.