விஜய் டிவி மேடையில் நடந்த சண்டை! நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய இரண்டு பிரபலங்கள்!
Kovai sarala and radha fight at vijay tv kalakka povathu yaaru

மக்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றது. மேலும், விஜய் தொலைக்காட்சியும் மக்களை ஈர்ப்பதற்காக நாளுக்கு நாள் புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிவருகிறது.
அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஓன்று கலக்கப்போவது யாரு. சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் போன்ற நடிகர்களை தமிழ் சினிமாவுக்கு குடுத்த நிகழ்ச்சிதான் கலக்கப்போவது யாரு. தற்போது இதன் சீசன் 8 ஒளிபரப்பாகி வருகிறது.
இதனை ஈரோடு மகேஷ் மற்றும் தாடி பாலாஜி தொகுத்து வழங்க பிரபல நடிகை ராதா மற்றும் நடிகை கோவை சரளா நடுவர்களாக பங்கேற்கின்றனர். இந்நிலையில் வரும் வாரம் ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ ஓன்று வெளியாகியுள்ளது. அதில் நடுவர்கள் ராதா மற்றும் கோவை சரளா இருவரும் சண்டை போட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதுபோல காட்ட பட்டுள்ளது.
இந்த வாரம் எலிமினேஷன் வேண்டாம் என கோவை சரளா சொல்ல, எலிமினேஷன் வேண்டும் என ராதா சொல்ல இருவருக்கும் சண்டை வருகிறது இதோ அந்த வீடியோ.