பிளாட்பார்ம்தான் வீடு! பாட்டு பாடி பிச்சையெடுக்கும் அவலநிலை! கண்ணீர் விடும் குக்கூ பட நடிகர்!
பிளாட்பார்ம்தான் வீடு! பாட்டி பாடி பிச்சையெடுக்கும் அவலநிலை! கண்ணீர் விடும் குக்கூ பட நடிகர்!
தமிழ் சினிமாவில் ராஜு முருகன் இயக்கத்தில் வெளிவந்த படம் குக்கூ. இதில் ஹீரோவாக அட்டகத்தி தினேஷ் மற்றும் அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா நாயர் நடித்திருந்தனர். இருவரும் இப்படத்தில் கண்பார்வையற்றவர்களாக நடித்திருந்தனர்.இப்படத்தில் ஹீரோ அட்டகத்தி தினேஷுக்கு நண்பனாக நடித்திருந்தவர் இளங்கோவன்.
கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான அவர் படம் முழுதும் ஹீரோவுடன் இருப்பார். அவர் தற்போது பிளாட்பார்மில் தங்கி பாட்டுப்பாடி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, எனது சொந்த ஊர் தஞ்சாவூர். கடந்த 2019ஆம் ஆண்டு குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர்களை பிரிந்து சென்னை வந்தேன். பின் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, பாட்டு பாடி பிழைப்பு நடத்தி வந்தேன்.
ஆனால் கொரோனா தொற்று வந்த பிறகு, ரூமுக்கு வாடகை கொடுக்க முடியவில்லை. பிளாட்பார்மிற்கு வந்துவிட்டேன். தற்போது பாட்டு பாடி பிச்சை எடுத்து வருகிறேன். பின்னர் தனக்கு நேர்ந்த துன்புறுத்தல்கள் குறித்து பேசிய அவர்,தற்போது சுரங்க பாதையில் இருக்கும் நான் அரங்க பாதைக்கு செல்ல வேண்டும். பெரிய பாடகராக வேண்டும். ஒரு வீட்டில் அல்லது அறையிலாவது தங்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.