சந்தானத்திற்கே விபூதி அடிக்கும் கூல் சுரேஷ்.. குலு குலு படத்திற்கு ரைட்ஸ் கேட்டு ரகளை..! பரபரப்பு பேட்டி.!
சந்தானத்திற்கே விபூதி அடிக்கும் கூல் சுரேஷ்.. குலு குலு படத்திற்கு ரைட்ஸ் கேட்டு ரகளை..! பரபரப்பு பேட்டி.!
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் கூல் சுரேஷ். இவருக்கு சமீப காலமாகவே பட வாய்ப்பு ஏதும் கிடைக்காத காரணத்தால், புதிதாக திரைக்கு வரும் படங்களை நேரில் சென்று பார்வையிட்டு செய்தியாளர்களின் பேட்டி வழியே பிரபலமாகி வருகிறார்.
மேலும் இவர் தனது குலதெய்வமாக சிம்புவை அடையாளப்படுத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரத்னகுமார் இயக்கத்தில் ராஜநாராயணன் தயாரிப்பில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் "குலுகுலு". இப்படத்தில் சந்தானம், அதுல்யா சந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று குலுகுலு படம் திரைக்கு வந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், சிம்புவின் தீவிர ரசிகராக அடையாளப்படுத்திக் கொண்ட கூல் சுரேஷ் தயாரிப்பாளரின் மீதும், குலு குலு படத்தின் மீதும் மான நஷ்டஈடு வழக்கு தொடரபோவதாக செய்தியாளரிடம் பேட்டியளித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் பேட்டியில் பேசுகையில், "கூல் சுரேஷ் என்றால் உங்களுக்கு நன்றாகவே தெரியும். எனது நண்பர்கள் அனைவரும் என்னை எப்போதும் "குலு குலு" என்று அழைப்பார்கள். சந்தானமும், சந்தான பட தயாரிப்பாளர் ராஜநாராயணனும் என்னை குலு குலு என்று கூப்பிடுவார்கள்.
எனக்கு தெரியாமலேயே எனது பெயரை படத்தின் தலைப்பாக பயன்படுத்தி இருக்கின்றனர். படம் நன்றாக இல்லை என்றாலும் விட்டு விடுவேன், படம் சிறப்பாக இருப்பதால் படத்தின் லாபத்தில் எனக்கு பங்கு வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.