அடக்கொடுமையே.. தண்டுவட அறுவை சிகிச்சைக்காக நடிகை குஷ்பூ மருத்துவமனையில் அனுமதி..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
அச்சச்சோ என்னாச்சு?.. தண்டுவட அறுவை சிகிச்சைக்காக நடிகை குஷ்பூ மருத்துவமனையில் அனுமதி..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
நடிகை குஷ்பூ தண்டுவட அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை குஷ்பூ. இவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிப்பது மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இறுதியாக இவரது நடிப்பில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான நெடுந்தொடர் சில வாரங்களுக்கு முன்பு தான் நிறைவடைந்தது. அடுத்ததாக குஷ்பூ தனது உடல் எடையை குறைத்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் விஜயின் வாரிசு படத்தில் குஷ்பூ நடிப்பதாக முன்பு தகவல் வெளியாகியிருந்ததை தொடர்ந்து, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று குஷ்பூ மருத்துவமனையில் அட்மிட்டாகி இருக்கும் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது coccyx bone-ல் சர்ஜரி செய்திருப்பதால் அடுத்த 2 நாட்களுக்கு முழு ரேஸ்டில் இருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் அனைத்தும் விரைவில் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறிவருகின்றனர்.