அடேங்கப்பா! 16 வயது அழகு ரதியாக மாறிய நடிகை குஷ்பூ! சும்மா வேற லெவலில் இருக்கீங்களே!!
அடேங்கப்பா! 16 வயது அழகு ரதியாக மாறிய நடிகை குஷ்பூ! சும்மா வேற லெவலில் இருக்கீங்களே!!
தமிழ் சினிமாவில் 80 90'ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என பல டாப் ஸ்டார்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக, முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. அவருக்கென ஹீரோக்களுக்கு இணையாக பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.
மேலும் அவரது ரசிகர்கள் குஷ்புவிற்கு கோயிலெல்லாம் கட்டினர். குஷ்பு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். மேலும் அவர் சின்னத்திரையிலும் களமிறங்கி பல சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்துள்ளார். நடிகை குஷ்பு தற்போதும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நன்கு கொழுகொழுவென இருந்த குஷ்பு தற்போது உடல் எடை மிகவும் குறைந்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார். இந்த நிலையில் நடிகை குஷ்பு தற்போது இளம் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் அசத்தலாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் நீங்கள் ஹீரோயினாகவே நடிக்கலாம்.. வேற லெவலில் இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.