இந்த நான்கு புகைப்படங்கள்தான் எங்களது வாழ்க்கை.! முக்கியமான நாளில் நடிகை குஷ்பு வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு!!
இந்த நான்கு புகைப்படங்கள்தான் எங்களது வாழ்க்கை.! முக்கியமான நாளில் நடிகை குஷ்பு வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு!!
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த டாப் நடிகைகளில் ஒருவர் குஷ்பூ. இவர் 80ஸ்,90ஸ் காலகட்டங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை குஷ்பு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போதுவரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அவர் வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரை சீரியலிலும் நடித்துள்ளார். தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை குஷ்பு கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி இயக்குனரும், நடிகருமான சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு இருமகள்கள் உள்ளனர். இந்த நிலையில் குஷ்பு- சுந்தர் சி தம்பதியினர் நேற்று தங்களது 23வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இந்த நிலையில் நடிகை குஷ்பூ காதலிப்பதற்கு முன்பு, காதலிக்கும் போது ,திருமணத்திற்கு பின்பு என எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, இந்த நான்கு புகைப்படங்கள்தான் எங்களது வாழ்க்கை. அன்று முதல் இன்று வரை எனக்கு துணையாய் இருக்கும் என் கணவருக்கு நன்றி என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.