அடஅட.. இது வேற லெவல்தான்! அஸ்வினின் குட்டி பட்டாஸ் படைத்த மாஸ் சாதனை! கொண்டாடும் ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற குக் வித்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அஸ்வின். இவர் கோமாளிகள் மற்றும் ஷிவாங்கியுடன் செய்யும் ரகளைகள் வேற லெவல்.
அஷ்வின் இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ரெட்டைவால் குருவி மற்றும் நினைக்கத் தெரிந்த மனமே என்ற சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களிலும் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி அஸ்வின் ஏராளமான குறும்படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும் அவரை பெருமளவில் பிரபலமடைய வைத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.
இந்த நிலையில் அஸ்வின் அண்மையில் பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜானுடன் இணைந்து குட்டி பட்டாஸ் என்ற மியூசிக்கல் ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். அது யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பெருமளவில் டிரெண்டாகி 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. பலரும் வாழ்த்துகளைத் தெறிக்கவிட்டு வருகின்றனர்.