மீட்பான், காப்பான், ஓ***ன் இதான் சூர்யாவின் அடுத்த படத்தின் டைட்டிலா?
KV Anandh asked people opinion for next suriya movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. NGK படத்தை தொடர்ந்து இயக்குனர் KV ஆனந்த் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் சூர்யா.
பொதுவாக படத்தின் முக்கியமான ஒன்று படத்தின் தலைப்பு. தலைப்பை தேர்வு செய்யவே பல இயக்குனர்கள் நீண்ட நாட்கள் எடுத்துகொள்வது உண்டு. அந்தவகையில் சூர்யாவின் அடுத்த படத்தின் தலைப்பை ரசிகர்கள் தேர்வு செய்யுமாறு கேட்டுள்ளார் இயக்குனர் KV ஆனந்த்.
இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், ஆர்யா போன்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கு இயக்குனர் கே வி ஆனந்த், மீட்பான், காப்பான், உயிர்கா இதில் எந்த டைட்டில் வைக்கலாம் என ரசிகர்களிடம் கேட்டார்.
அதற்கு ஒரு ரசிகர் மூன்று டைட்டிலும் நல்லா இல்லை என்று கூற அதற்கு இயக்குனர் KV ஆனந்த் மூன்றும் பெயரும் நல்லா இல்லை என்றால் அதற்கு பதில் ஓ****ன் னு title வைக்க முடியுமா?’ என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.