ஏன் நான் வாங்கி கட்டிக்கவா? மீரா மிதுன் விவகாரத்தில் சாதுர்த்தியமாக நழுவிய லட்சுமி ராமகிருஷ்ணன்!
Lakshmi ramakrishnan escaped from meera mithun issue
சர்ச்சைகளுக்கு பெயர் போன பிக்பாஸ் மீரா மிதுன் தமிழ் சினிமாக்களில் வாரிசு நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், விஜய் மற்றும் சூர்யா நெபடிசம் ப்ராடெக்டுகள், கோலிவுட் மாஃபியாவை பார்த்து அனைவரும் பயப்படுகிறார்கள் என்றும் மிகவும் மோசமாக பேசி சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
மேலும் மீரா மிதுன் நடிகர் விஜய் மற்றும் சூர்யா மனைவிகளை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் அவதூறாக பேசியும் வீடியோவை வெளியிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் அவரிடம் மீரா மிதுன் சமூகவலைத்தளங்களில் அவதூறாக பேசுவது குறித்தும், அவருக்கு எதிராக குரல் கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதை கண்ட லட்சுமி ராமகிருஷ்ணன், பேசி வாங்கிக் கட்டிக்கொள்ளவா? மீடுவுக்காக, பிரபலம் ஒருவர் கோவில்களை பற்றி பேசி ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டபோது, கந்தசஷ்டி கவசத்தை கிண்டல் செய்தபோது மற்றும் அண்மையில் தனிப்பட்ட விவகாரம் அனைத்தும் பொது பிரச்சினையானபோது குரல் கொடுத்தேன். ஆனால் தற்போது மற்றவர்கள் குரல் கொடுக்க வேண்டிய நேரம். நான் இடைவெளி எடுத்துக் கொள்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.