உடல் எடை குறைந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன சொல்வதெல்லாம் உண்மை லக்ஷ்மி ராமகிருஷ்ணன்..!
Lakshmi ramakrishnan new look photo leaked
டிகையும் , இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் பெயரை கேட்டாலே பலருக்கும் நினைவுக்கு வருவது “சொல்வதெல்லாம் உண்மை” என்ற நிகழ்ச்சியும், “என்னமா நீங்க இப்படி பண்றீங்களேம்மா..!” என்ற வசனமும் தான்.
தன்னை சுற்றி எப்போதுமே ஒரு சர்ச்சை வளையத்தை வரைந்து வைத்துகொள்வார் இவர். திரைப்படங்கள், நடிகர்கள், இயக்குனர் என அனைவருடனும் அடிக்கடி கருத்து மோதலில் ஈடுபட்டு தன்னுடைய பெயரை செய்திகளில் அடிபட செய்திவதில் கில்லாடி இவர்.
இந்நிலையில், இவர் பணியாற்றி வந்த “ஜீ தொலைக்காட்சி” நிறுவனம் இவரை கௌரவப்படுத்தும் விதமாக விருது ஒன்றை அறிவித்துள்ளது. இந்த விருதிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் “என்னுடைய சொந்த குடும்பமான ஜீ தமிழில் இருந்து கௌரவப்படுத்தப்பட்டுள்ளேன். விருதினை வாங்க தயார்” என்று தனது சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில், குண்டாக இருந்த இவர் உடல் இளைத்து ஒல்லியாக மாறியிருக்கிறார்.