முன்னாள் கணவனுடன் மோதும் ரஜினிகாந்த் மகள்.. சமாதானப்படுத்திய தயாரிப்பாளர்.!
முன்னாள் கணவனுடன் மோதும் ரஜினிகாந்த் மகள்.. சமாதானப்படுத்திய தயாரிப்பாளர்.!
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்திப் கிஷன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அதேபோல் தனுஷின் முன்னாள் மனைவி இயக்கத்தில் விக்ரம் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோ நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் லால் சலாம் திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படமும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டதால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதனிடையே தனுஷ் தான் வேண்டும் என்று பொங்கல் அன்று தனது படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளரை வற்புறுத்தியதாக தகவல்கள் வெளியாகியது.
இந்த நிலையில் இது குறித்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தியாகராஜன் தொலைபேசியில் ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ரஜினிகாந்த் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.