பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜுவிற்கு இப்படியொரு நிலைமையா.?
பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜுவிற்கு இப்படியொரு நிலைமையா.?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். உலக நாயகன் கமலஹாசன் தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. பிக்பாஸ் நிகழ்ச்சி டி ஆர் பியில் முதலிடம் பிடித்து தற்போது வரை பிரபலமான நிகழ்ச்சியாக பெயர் பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்களின் சினிமா வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்கின்றனர். இவ்வாறு இந்நிகச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில்.கடந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ராஜு. பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் செய்த கலாட்டாக்களும், ரகளைகளும் மக்களை கவர்ந்து அந்த சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்
இதன் பிறகு ராஜு என்ன செய்கிறார் என்று மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருந்து வந்த நிலையில் தற்போது ராஜு ஒரு திரைப்படத்தை இயக்குகிறார் எனும் செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதைபற்றிய விரிவான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.