"ஜீன்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்!" வெளியான புதிய தகவல்!
ஜீன்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்! வெளியான புதிய தகவல்!
1998ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "ஜீன்ஸ்". படத்தில் பிரஷாந்த் இருவேடங்களில் நடித்திருப்பார். மேலும் ஐஸ்வர்யா ராய், லட்சுமி, ராதிகா, நாசர், ராஜு சுந்தரம், செந்தில், எஸ். வி. சேகர் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்திருந்தனர்.
20 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனையை படைத்தது. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான முதல் படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது ஜீன்ஸ் திரைப்படம்.
மேலும் உலகின் தலைசிறந்த விருதான ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட பெருமையும் இப்படத்திற்கு உண்டு. ஏ. ஆர். ரஹ்மான் இசையில் உருவான இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடலும் இன்றுவரை அனைவருக்கும் விருப்பமான பாடல்களாக உள்ளன.
இந்நிலையில் இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் முதலில் அப்பாஸை தான் நடிக்க வைக்க இருந்தாராம். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அவர் நடிக்க மறுத்ததால் பிரசாந்தை வைத்து படம் எடுத்துள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.