மீண்டும் படமாகிறது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை! அதில் நடிக்கும் நடிகை யார் தெரியுமா!"
மீண்டும் படமாகிறது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை! அதில் நடிக்கும் நடிகை யார் தெரியுமா!
வினுச்சக்கரவர்த்தியால் "வண்டிச்சக்கரம்" எனும் படத்தில் சிலுக்கு என்ற சாராயம் விற்கும் பெண்மணியாக நடித்து அறிமுகமானவர் சில்க் ஸ்மிதா. அந்த பெயரே இவருக்கு தற்போது வரை நிலைத்துவிட்டது. இவரது 17ஆண்டுகால திரை வாழ்க்கையில் 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இந்நிலையில் 1996ம் ஆண்டு இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்போது வரை இவரது மரணம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இந்நிலையில் இவரது வாழ்க்கை 2011 ஆம் ஆண்டு "தி டர்ட்டி பிக்சர்" என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. இதில் வித்யா பாலன் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான "மார்க் ஆண்டனி" படத்தில் சில்க் ஸ்மிதாவாக விஷ்ணுபிரியா ஒரு சீனில் நடித்திருந்தார். அது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது தமிழில் இவரது வாழ்க்கை "சில்க் ஸ்மிதா - தி அன்டோல்ட் ஸ்டோரி" என்ற பெயரில் படமாக உருவாகவுள்ளது.
ஜெய்ராம் இயக்கும் படத்தில் "இருட்டு அறையில் முரட்டுக்குத்து" படத்தில் பேயாக நடித்த சந்திரிகா ரவி, சில்க் ஸ்மிதாவாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது.