மனவெறுப்பில் திரைத்துறையில் இருந்து விலகிவிட்டு ஆன்மீகத்தை நாடிய அமலா பால்..
மன வெறுப்பில் திரைத்துறையில் இருந்து விலகி விட்டு ஆன்மீகத்தை நாடிய அமலா பால்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார். இந்நிலையில் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே இயக்குனர் ஏ எல் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் விவாகரத்தானது. இதன் பிறகு ஏற்பட்ட பலவிதமான சர்ச்சைகளின் காரணமாக அமலா பாலிற்கு தமிழ் சினிமாவில் இருந்து பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் அமலா பால் தொடர்ந்து போட்டோ சூட் செய்து வருகிறார்.
மேலும் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் அமலாபால், தற்போது ஆன்மீகத்தை நாடி வருகிறார். இப்புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அமலாபால் திரைத்துறையிலிருந்து முற்றிலுமாக விலகி விட்டாரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.