×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல நகைச்சுவை லெஜன்ட் சார்லி சாப்ளினின் மகள் காலமானார்... திரையுலகினர் அஞ்சலி.!

பிரபல நகைச்சுவை லெஜன்ட் சார்லி சாப்ளினின் மகள் காலமானார்... திரையுலகினர் அஞ்சலி.!

Advertisement

சினிமாவில் நகைச்சுவை என்றாலே அது சார்லி சாப்ளின் தான். ஹாலிவுட் சினிமா தொடங்கி உலக சினிமா வரை அனைவரையும் சிரிக்க வைத்த பெருமை இவரையே சேரும். இவரது மகளான  ஜோசஃபின் சாப்ளின் 74 வயதில் காலமானார்.

இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் உறுதி செய்து இருக்கின்றனர். 1952 ஆம் ஆண்டு இவரது தந்தையின் லைவ் என்ற திரைப்படத்தின் மூலம் இளம் நாயகியாக அறிமுகமானார் ஜோசஃபின் சாப்ளின்.

சார்லி சாப்ளின் மற்றும் ஓநெயில் தம்பதியினரின் எட்டு குழந்தைகளில் மூன்றாவது குழந்தையாக 1949 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜோசஃபின் சாப்ளின். இவருக்கு சார்லி, ஆர்தர் மற்றும் ஜூலியன் ரோனட் என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர்,

கடந்த ஜூலை 13ஆம் தேதி இவர் பாரிஸ் நகரில் வைத்து மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். லாடியர்  டெஸ் பாவஸ் மற்றும் எஸ்கேப் டு தி சன் ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#hollywood #charlie chaplin #legend actor #jospin chaplin #died
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story