மாங்காய், புளியங்கா மாதிரி கூவி விற்கப்பட்ட லியோ டிக்கட்டுகள்? இணையத்தில் வைரலாகும் வீடியோ.!
மாங்காய், புளியங்கா மாதிரி கூவி விற்கப்பட்ட லியோ டிக்கட்டுகள்? இணையத்தில் வைரலாகும் வீடியோ.!
தளபதி விஜயின் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், பிக் பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு இங்கிலாந்து நாட்டில் 6 வாரங்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. இதுவரை 18 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. படம் வெளியாவதற்கு முன்பே வசூல் சாதனை செய்ததாக கூறப்படுகிறது.
படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் இந்த டிக்கெட் விற்பனைக்கு பின் சில ஏமாற்று வேலைகள் இருப்பதாக ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அகிம்சா என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் இங்கிலாந்தில் இந்த படத்தை வெளியிடுகிறது. இப்படம் தான் வாரிசு படத்தையும் வெளியிட்டது. வாரிசு படம் வெளியான போது நிறுவனம் இலவச டிக்கெட் களை வழங்கி உள்ளது.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிய நிலையில் லியோ பட டிக்கெட்டை இப்படித்தான் விற்கிறார்கள் என்ற தலைப்புடன் சமூக வலைதளங்களில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தெருத்தெருவாக இலவசமாக டிக்கெட் கொடுத்துவிட்டு எதற்காக பில்டப் செய்கிறீர்கள் என்று அந்த வீடியோவிற்கு கீழ் பலரும் கிண்டலாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.