பிரபல பாடகருக்கு கொலை மிரட்டல்.. அதிர்ச்சியில் திரையுலகம்.?
பிரபல பாடகருக்கு கொலை மிரட்டல்.. அதிர்ச்சியில் திரையுலகம்.?
இந்திய திரை உலகில் பிரபலமான பாடகராக வலம் வருபவர் யோ யோ ஹனிஷிங் என்று அழைக்கப்படும் ஹனி சிங். இவர் இசை தயாரிப்பாளர், ரேப்பர், பாடகர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் போன்ற பல திறமைகளை கொண்டவர். மேலும் தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒளிப்பதிவு கலைஞராக வாழ்க்கையை தொடங்கினார்.
இதன் பின்பு படிப்படியாக ரேப் பாடல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பிரபலமானார். இவரது பாடல்கள் 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமானது. இதனையடுத்து சினிமாவில் பாடத் தொடங்கினார் யோ யோ ஹனி சிங். இவரின் பல்வேறு பாடல்கள் ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதன் முதலில் தமிழ் திரைப்படத்தில் யோ யோ ஹனி சிங் பாடியிருக்கிறார். அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'எதிர்நீச்சல்' திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டானது.
இது போன்ற நிலையில், பாடகர் யோ யோ ஹனி சிங்கிற்க்கு கனடாவில் இருக்கும் கேங்ஸ்டர் தாதா கும்பலிடமிருந்து கொலை மிரட்டல் வந்திருக்கிறது. இது சம்பந்தமாக பாடகர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இச்செய்தி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்பாகவே தாதா கும்பல் மற்றுமொரு பிரபல பஞ்சாப் பாடகரை கொலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.