நடிகர் லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு பெரிய அழகிய மகள்களா. ! வைரலாகும் புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்!
Livingstan daughters photo viral
தமிழ் சினிமாவில் 1982 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். பின்னர் அவர் பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் சுந்தர புருஷன், கேப்டன் பிரபாகரன், உழைப்பாளி போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் லிவிங்ஸ்டன் கதாநாயகனாக மட்டுமின்றி வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். மேலும் அது மட்டுமின்றி ஒளிப்பதிவாளராகவும், உதவி இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பன்முகத்திறமை கொண்டு விளங்கி வருகிறார்.
நடிகர் லிவிங்ஸ்டனின் மனைவி ஜசின்தா. இவருக்கு ஜோவிதா ஜமீனா என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் லிவிங்ஸ்டனின் மூத்தமகள் ஜோவிதா கலாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும், மேலும் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை அம்பிகாவின் மகன் ராம் கேசவ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் லிவிங்ஸ்டன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் நடிகர் லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு பெரிய அழகிய மகள்களா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.