லோகேஷ் இன்று செய்ததை... அன்றே செய்து காட்டிய மறைந்த இயக்குனர்... அவரது மறைவிற்குப் பின் கொண்டாடும் ரசிகர்கள்.!
லோகேஷ் இன்று செய்ததை... அன்றே செய்து காட்டிய மறைந்த இயக்குனர்... அவரது மறைவிற்குப் பின் கொண்டாடும் ரசிகர்கள்.!
ஆங்கில படங்களில் பயன்படுத்துவதைப் போல சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர் லோகேஷ் கனகராஜ். ஒரு படத்தின் கதை அல்லது கேரக்டர் இன்னொரு படத்தின் மூலமாக இணைவது தான் சினிமாட்டிக் யுனிவர்ஸ். இது தற்போது லோகேஷ் யுனிவர்ஸ் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் அழைக்கப்படுகிறது.
ஆனால் லோகேஷ் கனகராஜ் முன்பாகவே சினிமாட்டிக் யுனிவர்ஸ் தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதனை பயன்படுத்தியவர் மறைந்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான கேவி ஆனந்த். தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளராக இருந்த இவர் கனா கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மூலம் தன்னை ஒரு வெற்றிகரமான இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கோ, மாற்றான், கவண், காப்பான் போன்ற திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார். இவரது திரைப்படங்கள் அனைத்துமே சமூக விஷயங்களை சார்ந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் திரைக்கதையிலும் மாயாஜாலம் செய்யக் கூடியவர் இவர். இவரது திரைப்படங்களில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் பயன்படுத்தியது எவ்வாறு இருந்திருக்கிறது என்று பார்ப்போம்.
இவர் இயக்கிய அயன் திரைப்படத்தில் வரும் இயக்குனர் கதாபாத்திரம் கருணாஸிடமிருந்து வங்கி கொள்ளை தொடர்பான சினிமா படத்தை பற்றி கேட்கும். இவர் அடுத்து இயக்கிய படத்தில் வங்கி கொள்ளை முதல் காட்சியாக வரும். கோ திரைப்படத்தில் இடம்பெறும் நிறைய வசனங்கள் அயன் திரைப்படத்தைப் பற்றி கலாய்ப்பதாகவே இருக்கும். இதுபோன்று தன்னுடைய இரண்டு படங்களுக்குமான இணைப்பை இவர் தொடர்ந்து செய்து கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார் கே வி ஆனந்த். அவருடைய மறைவிற்கு பின்பு தான் அவருடைய அருமை சினிமா ரசிகர்களுக்கு தெரிந்திருக்கிறது.