லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு தடை ஏன்? - தம்பி விஜயை ஆதரித்து, திமுக அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் சீமான்.!
லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு தடை ஏன்? - தம்பி விஜயை ஆதரித்து, திமுக அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் சீமான்.!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், திரிஷா, சஞ்சய் தத் உட்பட பலரின் நடிப்பில், அனிரூத் இசையில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்.19 தேதி வெளியாகிறது.
ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள லியோ திரைப்படம், உலகளவில் வெளியாவதால் ரூ.500 கோடியை கடந்து வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாக இருந்த நிலையில், இறுதியில் அவை இரத்து செய்யப்பட்டன. அரசு அதற்கான அனுமதியை வழங்கவில்லை.
இந்நிலையில், இவ்விசயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தம்பி விஜய் நடித்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவிருந்தது.
இன்று நடைபெறவிருந்த இசை வெளியீட்டு விழா நடக்கவில்லை. எதற்காக அனுமதி மறுக்கப்பட்டது?. ரகுமான் இசை நிகழ்ச்சி விவகாரத்தில் ரகுமானுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என அனைவர்க்கும் தெரியும்.
ஆனால், அவரின் மீது விமர்சனம் வைப்பது ஏன்?. கூட்டம் அதிகமாக கூடும் என தெரிந்தால், அங்கு ஏன் காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்போகிறார்கள்?. களத்தை ஆய்வு செய்யாமல் அனுமதி வழங்கப்பட்டதா? என பல கேள்விகளை நாம் முன்வைப்போம்.
அவர்களின் கூற்றுப்படியே வைத்துக்கொண்டாலும், களஆய்வு செய்து தேவையான முன்னெச்சரிக்கை செய்து விழா நடத்த அனுமதி வழங்கலாம். அதனை நடக்கவே கூடாது என தடை செய்வது எப்படி?. நீங்கள் கோடிக்கணக்கானோரை அழைத்து மாநாடு நடத்தலாமா?" என பேசினார்.