"அஜித் சாரை வைத்து படம் இயக்கவேண்டும் என்று ஆசை.. ஆனால்" இயக்குநர் லோகேஷ் ஓபன் டாக்.!?
அஜித் சாரை வைத்து படம் இயக்கவேண்டும் என்ற ஆசை.. ஆனால் இயக்குநர் லோகேஷ் ஓபன் டாக்.!?
லோகேஷ் கனகராஜ் திரைபயணம்
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இதன் பின்பு இவர் இயக்கத்தில் வெளியான கைதி, திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்று ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.
இதன் பிறகு மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மிகப்பெரும் வெற்றி திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இதுபோன்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் நடிப்பில் ஒரு படம் உருவாக வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: " அண்ணனை சைட் அடிப்பியா என கேட்ட தோழிகள்" சூர்யாவின் தங்கை கூறிய உண்மை சம்பவம்.!?
அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு
ஏனெனில் அஜித் ரசிகர்கள் அஜித்தை ஆக்சன் படங்களில் பார்க்கவே அதிகம் விரும்புவதுண்டு. இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் ஆக்ஷன் கலந்த படங்களும், அஜித்தின் நடிப்பும் இணைந்தால் மிகப்பெரும் மாஸ் காம்போவாக இருக்கும் என்று ரசிகர்கள் எண்ணி வருகின்றனர்.
உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்
இதை உறுதிப்படுத்தும் விதமாக லோகேஷ் கனகராஜ் ஒரு விருது வழங்கும் மேடையில் பேசியுள்ளார். மேடையில் அஜித்தை வைத்து படம் இயக்குவீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அஜித் சாருடன் படம் பண்ண வேண்டும் என்று ஆசை தான். அது விரைவில் நடக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இவ்வாறு கூறியிருப்பது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!