லோகேஷ் கனகராஜ் சினிமாவை விட்டு போகிறாரா.? இவரின் கடைசி படம் இதுதானா.! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!
லோகேஷ் கனகராஜ் சினிமாவை விட்டு போகிறாரா.? இவரின் கடைசி படம் இதுதானா.! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளர்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் சமூக வலைத்தளங்களில் குறும்படங்கல் வெளியீட்டு பிரபலமானார். இதன் பின்பு முதன்முதலில் தமிழில் 'மாநகரம்' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் பெறுதளவில் வெற்றி பெறவில்லை.
இதனையடுத்து சில வருடங்கள் இயக்குவதில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட லோகேஷ் கனகராஜ், தற்போது மீண்டும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்கள் மிகப் பெரும் வெற்றியை பெற்றது.
மேலும் சமீபத்தில் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை அடைந்தது. லோகேஷ் யுனிவர்ஸ் என்ற புது அத்தியாயத்தை சினிமாவில் லோகேஷ் கனகராஜ் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனராஜ் பத்திரிகையாளர் சந்திப்பில் இன்னும் 20 வருடங்களுக்கான கதை லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் என்ற விதத்தில் ரெடியாக இருக்கிறது. குறிப்பிட்டு பத்து படங்கள் மட்டுமே இயக்குவேன். அதன் பின் சினிமாவை விட்டு விலக இருப்பதாக லோகேஷ் கூறியிருக்கிறார். இச்செய்தி லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.