பிரபல இயக்குனராக திகழும் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?
பிரபல இயக்குனராக நிகழும் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?
தமிழில் மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து முன்னணி இயக்குனர்களுள் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
தளபதியை விஜயை வைத்து மாஸ்டர், உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து விக்ரம் போன்ற தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். தற்போது இவர் இயக்கத்தில் மீண்டும் தளபதி விஜயை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை லியோ திரைப்படம் 550 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.
அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் சூப்பர் ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் தொடர் வெற்றிகளை மட்டும் கண்டு வரும் லோகேஷ் கனகராஜின் முழு சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது லோகேஷின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 40 கோடி வரை இருக்கும் என தகவல் கூறப்படுகிறது.