"மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்! பதில் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!"
மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்! பதில் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!
2012ம் ஆண்டு "போடா போடி" படத்தை இயக்கியதின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடி தான் போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் பாடலாசிரியராகவும், நடிகராகவும் உள்ளார்.
அதே போல் 2017ம் ஆண்டு "மாநகரம்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து இவர் கைதி, விக்ரம், மாஸ்டர் படங்களை இயக்கியுள்ளார். தற்போது மீண்டும் விஜயுடன் இணைந்து "லியோ" திரைப்படத்தை முடித்துள்ளார்.
வரும் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், நெட்டிசன் ஒருவர் விஜயுடன் லோகேஷ் கனகராஜுக்கு சண்டை ஏற்பட்டதாக ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதை விக்னேஷ் சிவன் லைக் இட்டிருந்தார். இதற்கு விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
தொடர்ந்து விக்னேஷ் சிவன் அந்த விஷயத்திற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், " சாந்தமாகுங்கள் நண்பரே" என்று பதிலளித்துள்ளார். இந்த ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது.