லாஸ்லியாவுக்கு கிடைத்த உயரிய விருது! மகிழ்ச்சியில் ரசிகர்களுக்கு என்ன கூறியுள்ளார் என்று பாருங்கள்! குவியும் வாழ்த்துகள்.
Losliya award
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்தவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. அடிப்படையில் இவர் ஒரு செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் கலந்து கொண்ட லாஸ்லியாவுக்கு அவரின் அழகான தமிழல் மக்கள் மனதில் இடம் பிடித்து நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஆர்மி உருவானது.
இந்நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்று அவருக்கு தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நபர் என்ற விருதை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. அதற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அதில் முதலில் நீங்கள் எனக்கு கொடுத்த அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி. நீங்கள் என் மீது கொண்ட அன்பு காரணமாகவே இந்த விருது கிடைத்துள்ளது. மீண்டும் உங்களுக்கு மிக்க நன்றி என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அப்புகைப்படத்திற்கு தங்களது லைக்குகளை குவித்து வருகின்றனர்.