அடேங்கப்பா, இங்கேயும் வந்துட்டாரா லாஸ்லியா!! இந்த இளசுகள் செய்ற அட்டகாசத்தை பாருங்களே!!
losliya photo in temple festival baner
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் அனைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செய்துள்ளது பிக்பாஸ் குழு. மேலும் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3ல் 15 போட்டியாளர்களுள் ஒருவராக இலங்கையை சேர்ந்த பிரபல செய்திவாசிப்பாளரான லாஸ்லியா கலந்துகொண்டுள்ளார்.
அவரது பந்தா இல்லாத குழந்தைத்தனமான பேச்சிற்கும், மற்றவர்களை பற்றி புறம் பேசாத குணத்திற்கும் லாஸ்லியாவிற்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.மேலும் ஒவ்வொரு நாள் காலையிலும் ஒலிபரப்பப்படும் பாடலுக்கு இவர் போடும் நடனத்தை பார்பதற்காகவே தனி ரசிகர் கூட்டமே உள்ளது. மேலும் இவருக்கென லாஸ்லியா ஆர்மியும் உருவானது.
இந்நிலையில் ரசிகர்கள் சிலர் சாலையில் லாஸ்லியாவின் கட்அவுட் வைத்து அதற்கு பால் அபிஷேகம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் திருநெல்வேலியில் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அதற்கு இளைஞர்கள் கட்அவுட் வைத்துள்ளனர். பொதுவாக திருவிழாவென்றால பிரபல நடிகர்களின் போட்டோவைப் போட்டு கட்அவுட் வைப்பதுதான் வழக்கம். இந்நிலையில் தற்போது அதற்கு மாறாக லாஸ்லியா புகைப்படத்தை போட்டு ப்ளக்ஸ் அடித்து ரசிகர்கள் ஊர் முழுவதும் ஒட்டியுள்ளனர்.