சூரியனுக்கு அருகில் நிற்பது போல இருக்கு.. செம ஹேப்பியில் லவ் டுடே நடிகர்.! எதனால் பார்த்தீங்களா!!
சூரியனுக்கு அருகில் நிற்பது போல இருக்கு.. செம ஹேப்பியில் லவ் டுடே நடிகர்.! எதனால் பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது அவர் இயக்கி, அவரே ஹீரோவாக நடித்துள்ள படம் லவ் டுடே. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா, யோகி பாபு உட்பட பல பிரபலங்கள் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
லவ் டுடே திரைப்படம் கடந்த நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விட அமோக வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. மேலும் லவ் டுடே பட இயக்குனர் மற்றும் நடிகரான பிரதீப்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் லவ் டுடே திரைப்படத்தை கண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரதீப், இதை விட வேறு என்ன கேட்க முடியும்? சூரியனுக்கு அருகே நிற்பது போல இருக்கிறது. இறுக அணைப்பு, அந்த கண்கள், சிரிப்பு, ஸ்டைல், அன்பு. சூப்பர் ஸ்டாரை பார்த்தேன். எனக்கு வாழ்த்து கூறினார். நீங்கள் கூறிய வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது என பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.