வேற லெவல் வசூல் வேட்டை.! கெத்துகாட்டும் லவ் டுடே ! இதுவரை மட்டும் எவ்வளவு வசூல் தெரியுமா??
வேற லெவல் வசூல் வேட்டை.! கெத்துகாட்டும் லவ் டுடே ! இதுவரை மட்டும் எவ்வளவு வசூல் தெரியுமா??
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்ற கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அவர் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் லவ் டுடே. அதில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா, யோகி பாபு உட்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இன்றைய கால சில காதல் எப்படியுள்ளது என்பதை காமெடியுடன் எடுத்துகூறி வெளிவந்த லவ் டுடே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விட அமோக வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்த திரைப்படம் ஐந்து கோடி பட்சத்தில் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் நாளுக்கு நாள் வசூல் வேட்டி அதிகரித்து இதுவரை லவ் டுடே திரைப்படம் 46 கோடியை வசூல் செய்துள்ளதாகவும் விரைவில் 50 கோடியை கடந்து விடும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. புதுமுக நடிகர் நடித்தாலும் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு படக்குழுவினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.