சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! சறுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு!
Lyca production joins with sivakathikeyan 17th movie
தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களை தயாரித்து வருகிறது லைக்கா நிறுவனம். விஜய் நடித்த கத்தி, தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2 . 0 , தற்போது கமல் நடித்து வரும் இந்தியன் 2 போன்ற மாபெரும் படங்களை தயாரித்துள்ளது லைகா நிறுவனம்.
இதுமட்டும் இல்லாது பலவாறு தமிழ் படங்களை தயாரித்து அதில் வெறியும் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் SK17 படத்தை லைகா தயாரிக்க உள்ளதாக சற்றுமுன் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த படம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட உள்ளதாகவும், இந்த வருடம் ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் அடுத்த வருடம் படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்ட்டுள்ளது.
நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கவுள்ளார். பிரபல இசை அமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கவுள்ளார். பல பிரபலங்கள் ஓன்று சேர்வதால் படம் நிச்சயம் வெற்றிபெறும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.