தனிஒருவன் தொடர்ந்து ஜெயம் ரவியின் இந்த ஹிட் பட பார்ட் 2 ரெடி.! சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குனர் மோகன் ராஜா.!!
தனிஒருவன் தொடர்ந்து ஜெயம் ரவியின் இந்த ஹிட் பட பார்ட் 2 ரெடி.! சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குனர் மோகன் ராஜா.!!
தமிழ் சினிமா நட்சத்திரங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவரின் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியான 'அம்மா நன்னா ஒ தமிழா அம்மயி' படத்தின் ரீமேக் ஆகும்.
எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் நதியா, அசின், பிரகாஷ்ராஜ், விவேக் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்தை மோகன்ராஜ் இயக்க ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். தமிழ் திரையுலகில் இப்படம் வசூல் ரீதியாக வெற்றி படமாகவும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் மோகன்ராஜ் கூறியதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தின் கதை முடிவுற்ற நிலையில் தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு பிறகு இப்படத்தின் பட வேலை தொடங்குவதாக கூறப்படுகிறது. இப்படத்திலும் நடிகர் ஜெயம் ரவியே கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றிய தகவல் விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகை நதியா கதாபாத்திரம் இடம்பெறாது என இயக்குனர் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.