"தன்னை விட 3 வயது அதிகமான நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட மாதவன்!"
தன்னை விட 3 வயது அதிகமான நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட மாதவன்!
2000ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய "அலைபாயுதே" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதவன். தொடர்ந்து மின்னலே, டும் டும் டும், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், ஆயுத எழுத்து, இறுதிச்சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் பாலிவுட்டிலும் ரங் தே பசந்தி, குரு, 3 இடியட்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள மாதவன், தற்போது "தி ரயில்வே மென்" என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இது நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளது.
இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மாதவன், 1988ம் ஆண்டு வெளியான "கயாமத் சே கயாமத் தக்" என்ற திரைப்படத்தை பார்த்தபோது ஜூஹி சாவ்லா மேல் ஈர்ப்பு வந்ததாகவும், அவரை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக தன் அம்மாவிடம் கூறியதாகவும் மாதவன் கூறினார்.
ஜூஹி சாவ்லா மாதவனை விட 3 வயது பெரியவர் என்பதும், மேலும் "தி ரயில்வே மென்" வெப் சீரிஸில் ஜூஹியும் நடித்துள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் இருவரும் சேர்ந்து நடிக்க முடியவில்லை எனவும், இருவரது காட்சிகளும் தனித்தனியாக படமாக்கப்பட்டதாகவும் மாதவன் கூறினார்.