இந்தியாவே அதிர்ச்சி.. கயவர்களால் சீரழிக்கப்பட்டு, 12 வயது சிறுமி இரத்தம் வடிய உதவி கேட்டு 8 கி.மீ பயணம்.. உதவமுன்வராத மக்கள்.!
இந்தியாவே அதிர்ச்சி.. கயவர்களால் சீரழிக்கப்பட்டு, 12 வயது சிறுமி இரத்தம் வடிய உதவி கேட்டு 8 கி.மீ பயணம்.. உதவமுன்வராத மக்கள்.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, மர்ம நபர்களால் சம்பவத்தன்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் நிலையில், பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி அரைகுறை ஆடையுடன் உதவிகேட்டுள்ளார்.
கயவர்களின் கொடுமையால் சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் இருந்து இரத்தம் வெளியேற, கடுமையான வலியிலும் தனக்கு உதவி கிடைக்கும் என நம்பி கிட்டத்தட்ட 8 கி.மீ தூரம் நடந்து சென்றுள்ளார்.
வழியில் அங்கங்கே நிற்பவர்களிடம் உதவி கேட்டும் பலனில்லை. மக்கள் யாருமே அவரை கண்டுகொள்ளவில்லை. இறுதியாக சிறுமி ஆசிரமம் ஒன்றுக்கு சென்றடைந்துள்ளார்.
அங்கு சாமியார் சிறுமியை கண்டதும், சிறுமிக்கு எதோ நடந்துள்ளதை உறுதி செய்து உடனடியாக ஆடை வழங்கி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிறுமி உதவி கேட்டு நடந்து செல்லும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.